Friday, 16 September 2016

லெமுரியா-6

லெமூரியத்தமிழ் படிவுகள் எகிப்தில்? வியத்தகு அறிவியல்


ஏலியன்ஸ் (வேற்று கிரக வாசிகள்) பற்றி பொதுவாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவை தொடர்பான சம்பவங்களை பார்த்தோமானால்… அவர்கள் பயணிப்பதாக கருதப்படும் பறக்கும் தட்டானது; திடீரென திசைகளை மாற்றத்தக்கதாயும், பறப்பதற்கு ஓடுபாதை தேவையற்ற ஒன்றாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.
அதேவேளை இராமாயணத்திலும் இராவணனின் வாகணமான புட்பக (புஸ்பக வோ தெரியல) விமானம் விபரிக்க பட்டுள்ளதும் இதே முறையில் தான். இராவணனுக்கு 10 தலைகள் என கூறப்பட்டுள்ளது அது அவனது அறிவு மேம் பாட்டை குறித்ததாக இருக்கலாம். காலப்போக்கில்… லெமூரியாவின் பேரழிவின் பின்னர்…அவை மாற்றப்பட்டு கதைகளாகியிருக்கலாம்.
(இன்னும் நாம் ஏலியன்ஸின் பறக்குந்தட்டுக்கு கிட்டக்கூட வரவில்லை… பறக்கும் தட்டின் இயக்கம் பற்றியும் பொரிக்ஷா கூறியுள்ளான்.)
பொரிக்ஷா எனும் ரஷ்ய சிறுவன் ஏற்கனவே… லெமூரியாவில் வாழ்ந்தவர்கள் அறிவாளிகள் என கூறியுள்ளான். (பொரிக்ஷா பற்றி ஏற்கனவே குறிப்பு தந்திருக்குறேன்.)
மேலும் இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளபட்ட சிறிய அளவிலான ஆராச்சியின் போது… சில பாறைப்படிவங்களில் அணு படிவுகள் காணப்பட்டுள்ளன. ( இது “அலெக்ஸான்டர் கொண்ட்ற டேவ்” எனும் பிரபல ஆராச்சியாலரின் தலைமையில் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட போது அறியப்பட்டுள்ளது. இது அவரால் எழுதப்பட்ட புத்தகத்திலிருந்தது.)
இது பற்றி அவர் குறிப்பிடுகையிலேயே… எம்மை விட அறிவில் மேம் பட்டவர்கள் வாழ்ந்திருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் என ஐயம் வெளியிட்டுள்ளார்.
சில நேரம் அது இயற்கையானதாகவும் இருக்கலாம்.
அதே வேளை எகிப்து நதி பகுதிகளிலும், யூப்ரட்டீஸ் நதிகரையிலும் கண்டெடுக்கப்பட்ட புராதன பொருட்களை பார்க்கையில் அதில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களானது திராவிட மொழிக்குடும்பத்தை சார்ந்த எழுத்துக்களாக உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. ( முன்னர் சுமேரிய எழுத்துக்கள் என கருதப்பட்டு வந்தது. எனினும் பின்னைய ஆராச்சிகளின் மூலம் அது அதிகமாக திராவிட எழுத்துக்களை, சொற்களை ஒத்துப்போவது அறியப்பட்டது. பொதுவாக இடத்தை குறிப்பதற்கு ஊர் எனும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது.( இன்னும் பல சொற்றகள் உதாரணமாக போட்டிருந்தார்கள் எனக்கு மறந்துவிட்டது.) ஈரானில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போதும், திராவிட, தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அன்றாட பாவணைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இன்னொரு விடையம்… உலக வரை படத்தில் தெற்கு நோக்கி செல்லச்செல்ல திராவிடத்தன்மை அதிகரிப்பதை காணமுடியும். ( நிரூபனமானது.)
ஆகவே… இந்து சமுத்திரத்தில் ஒரு கண்டம் இருந்தது… அங்கு திராவிட மொழிக்கு நிகரான மொழி பேசப்பட்டது எனும் வாதம் நிரூபனமாகிறது.
—————————————————————————————–
இனி…
மாயன் நாட்காட்டி, எகிப்திய தொழில் நுட்பம் , இன்றைய நாட்காட்டி, இன்றைய தொழில் நுட்பம் என்பவற்றுடனான லெமூரியாவின் தொடர்பை பார்க்கலாம்.
நாட்காட்டி வியக்கத்தக்கதாக உள்ளது.
குறிப்பாக இன்றைய கிறீன் விச்சிக்கு நிகராக முன்னர் இலங்கையில் ஒரு இடம் இருந்துள்ளது….


லெமுரியா-5

லெமூரியா / குமரி கண்டத்தில் இலங்கையின் பங்கு என்ன?


 



போனபதிவில் லெமூரியாவையும் இராமாயணத்தையும் ஒப்பிட்டு பார்த்திருந்தோம். அங்கு ஒரு சிக்கல் எழுகிறது…
அதாவது, இராமாயணத்தில் தற்போதைய பாக்கு நீரினையை கடந்தே இராமர் இலங்கை சென்றதாக கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் பார்க்கும் போது, லெமூரியா கண்டத்தில் இராமாயணம் நடந்தது என்பது பொய்யாகிறது. எனினும், இன்றைய மதுரையல்ல உண்மையான மதுரை. கடல் கோல்கள்,கடலரிப்புக்கள் காரணமாக மாற்றமடைந்த 3வது மதுரையே இன்றைய மதுரை. ( நிரூபிக்கபட்டது). அதே போல், இந்தியாவிலிருக்கும் “திருநெல்வேலி” எனும் நகர் பெயர் இலங்கையிலும் ஒரு பிரதேசத்துக்குண்டு.
(சற்று திரிபடைந்து, மொழி நடைக்கேற்ப‌ “தின்ன வேலி” என கூறப்படுகிறது.) அதா போல் தான் வத்தளங்குன்று போன்ற பிரதேசங்களும்.
இவ்வாறு தாம் வாழ்ந்த இடங்களின் பெயர்களை புதிதாக வாழப்போகும் இடங்களுக்கு வைப்பது, அக்காலத்தில் உலக மரபு, சம்பிரதாயமாக இருந்துள்ளது. (பல நாடுகளில் இப்படி ஒரே பெயர்கள் இருக்கின்றனவாம்.)
ஆகவே, என்னை பொறுத்த வரையில் இப்போதிருக்கும் இலங்கையல்ல இராமாயணத்தில் கூறப்பட்டது. இப்போது இருப்பது பண்டைய இலங்கையின் மலைப்பகுதி பிரதேசமாகும். ( தற்போதைய இலங்கையின் புவியியல் அமைப்பை பார்த்தாலே தெரியும். இலங்கை ஒரு மலை பிரதேசத்திலிருந்த நாடு என்பது.)
நிரூபிப்பதற்கு சான்றுகள் குறைவாயினும் தொலமியின் 1 வது உலக வரைபடத்தை இதற்கு ஒரு சான்றாக கொள்ளலாம்.
தொலமியின் உலக வரைபடத்தை பார்த்தோமானால், இலங்கை தீவானது 14 மடங்கு பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பல நாடுகளை சரியாக கணிப்பிட்ட தொலமி இலங்கையை தவறுதலாக குறிப்பிட்டிருக்க சந்தர்ப்பமில்லை.
( தொலமியின் வரைபடம் தொடர்பாக பெரிய சர்ச்சையே உள்ளது. 1) தொலமி தாம் கீறியதாக சொல்லும் வரைபடம் உண்மையில் அவர் கீறியதல்ல; அது ஒரு பலங்குடி மக்களிடையே புலக்கத்திலிருந்தது. 2) அது வெளியுலகத்தவரால் வரையப்பட்டது. 3) நாம் தொலமியினது எனக்கூறுவது தொலமியினதே இல்லை. …)
எது எப்படியோ இலங்கை லெமூரியா கண்டத்திலிருந்த ஒரு முக்கிய நாடு.
ஏற்கனவே கூறியிருந்தேன் “லெமூரியா கண்ட‌த்தின் மத்தியில் பாரிய மலைத்தொடர் இருந்தது” என. அதன் கிழக்கு பகுதியிலேயே இலங்கை இருந்துள்ளது. ராமர் முதலானோர் வாழ்ந்தது மேற்கு பகுதியில். மலைத்தொடர்களுக்கிடையே நீரோடைகள் காணப்படுவது சகஜம், அப்படி பட்ட நீரோடையை தாண்டி கிழக்கை நோக்கி படையெடுத்ததே, பாக்கு நீரினை யை கடந்ததாக கொள்ளப்படுகிறது.
பண்டைய அறிவு என்பது. தற்போதைய அறிவியல் விஞ்ஞானத்திற்கு நிகரான ஆனால் முற்று முழுதாக வேறுபட்ட தொழில் நுட்ப ஆறிவாகும். உதாரணமாக நாம் இன்று பயன்படுத்தும் கணித குறியீடான “ஃபை”(22/7) என்பது 16 ம் நூற்றாண்டில்(??) அறியப்பட்ட ஒன்று. (வட்டம் தொடர்பான பாவனைகளுக்கு பாவிக்கப்படுகிறது.)
ஆனால், கி.மு 10000 5000 இடைப்பட்ட எகிப்திய பிரமிட்டுகளில் இத்தொழில் நுட்பம் கச்சிதமாக பாவிக்கப்பட்டுள்ளது!!!

லெமுரியா-4

அழிந்து போன உயிரினம் லெமூரியாவில் வாழ்ந்ததா?


சமீபத்தில் சீன ஆராச்சியாள‌ர்களால் இந்தோனேசிய பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் நியான்டர்தார்ஸினுடையதாக இருக்கலாம் என கருதப்பட்டது. நியான்டர்தார்ஸ் என்றழைக்கப்படும் உயிரினம் சுமார் 40 லட்சம் ( நான் குறிப்பிட்ட காலம் பிழையாக இருக்கலாம், சரியானது தெரிந்தவர்கள் பின் குறிப்பிடவும்.) ஆண்டுகளுக்கு முன் வரை மனிதனுடன் வாழ்ந்த உயிரினம். மனிதன் பரிமாண வளர்ச்சி பெற்ற அதே மூதாதையரிடமிருந்தே அவ் உயிரினமும் தோன்றியிருந்தது. உருவ அமைப்பிலும் மனிதனை ஒத்திருந்தாளும்; சில முக்கிய வேறுபாடுகள் காணப்பட்டன. அதாவது, தலை சாதாரன மனித தலையை விட சற்று பெரிதாகவும், நெஞ்சுப்பகுதி சற்று முன்னோக்கி நீண்டதாகவும், முக்கியமாக மனிதனை விட உடல் வலு மிக்கவைகளாக‌ காணப்பட்டாலும் மூளைவளர்ச்சி ஒப்பீட்டு ரீதியில் மிக குறந்ததாக இருந்துள்ளது. வழமை போலவே இவ் உயிரினமும் ஆதி மனிதனின் வேட்டையில் முற்றாக ஒழிக்கப்பட்டது. ( நியான்டர்தார்ஸ்ஸின் உடலில் 13 சோடி விலா எலும்புகள் காணப்பட்டுள்ளன. இன்றும் மனிதரில் 5% ஆனோருக்கு 13 சோடி விலா எலும்புகள் உள்ளனவாம். அப்படியானால்… இனக்கலப்பு நடந்திருக்கலாம்… (சாதாரண மனிதரில் 12 சோடி விலா எலும்புகளே இருக்கும்.))
ஏன் நியான்டர்தார்ஸ் பற்றி சொல்ல வந்தேன் என்றால்…
நமது புராணங்களில் (இராமாயணம்) ஹனுமார் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை அவர்கள் மனிதர்களுடன் (ராமர் முதலானோர்) இருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்காக ஹனுமார் நியான்டர்தார்ஸ் இனத்தை சேர்ந்தவர் என சொல்ல வரவில்லை, மனிதன் பூரண பரிமாண வழர்ச்சியை எட்டமுன் நியான்டர்தார்ஸ்+ஆதி மனிதன் இக்கு இடைப்பட்ட ஒரு உயிரினம் இருந்துள்ளது. ( டாவினின் பரிமாண படியில் காணாமல் போனது இதுவாக இருக்கலாம்.) அந்த இனத்தின் மிஞ்சிய குழுவே வாலி,சுக்ரீவனுடைவது. எமது புராணங்களில் கூட மனிதனுடையதும் குரங்கினதும் உடலமைப்பை இணைத்தது போன்றே இவர்களது உடல்வாகு சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இராமாயணம், மகாபாரதம் என்பவை வெறும் இலக்கியமோ புராணமோஇல்லை. அவை உண்மையில் நடந்த வரலாறு.(பிற்காலங்களில் இட்டுக்கட்டப்பட்டு புராணமாக்கப்பட்டு விட்டது. ஏன்…??? அது பிறகு…)
முக்கியமாக அது லெமூரியாக்கண்டத்தில் வாழ்ந்த அறிவுமிக்க, உயர்ந்த நாகரீகம்மிக்க மனிதர்களுக்கிடையே நடந்த வரலாற்று சம்பவங்கள்.
மேருமலை போன்றவை வெறும் கற்பனையல்ல. அவை அனைத்தும் லெமூரியாக்கண்டத்தின் மத்தியில் பெரும் சுவர் போன்று அமைந்திருந்த மலைகள். ( இன்றைய கிறீன் விச்சுக்கும் அதற்கும் தொடர்புண்டு; அதை பின்னர் பார்க்கலாம்…)
லெமூரியா கண்டத்தின் மத்தியில் தொடர்ச்சியான நீண்டமலைத்தொடர் காணப்பட்டுள்ளது. ( இந்து சமுத்திரத்தின் ஆழங்களை ஆராயும் போது அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட ஒரு நீண்ட தூரத்துக்கு கடலின் ஆழம் குறைவாகவுள்ளது.)

Wednesday, 14 September 2016

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

!! பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம் !

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

11 *கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.

12. *கடல்* - (Sea) சமுத்திரம்.

13. *கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.

14. *கலிங்கு* - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.

15. *கால்* – (Channel) நீரோடும் வழி.

16. *கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.

17. *குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.

18. *குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.

19. *குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.

20. *குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.

21. *குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.

22. *குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று

23 . *குளம்* - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.

24. *கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.

25 . *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.

26. *வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.

27. *கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.

28. *சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.

29. *சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

30. *சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.

31. *தடம்* - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.

32 . *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.

33. *தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.

34. *திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்.

35. *தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.

36. *தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.

37. *நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு.

38. *நீராவி* - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்.

39. *பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.

40. *பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு.

41. *பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.

42. *மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.

43. *மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.

44. *மதகு* - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது.

45. *மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.

46. *வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.

47 *வாய்ககால்* - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.

Saturday, 10 September 2016

லெமூரியா-2

கண்ட நகர்வும் லெமூரியாவும்!


போனபதிவில், மூ மற்றும் லெமூரியா பற்றி பேசிய அதேவேளை லெமூரியா இந்து சமுத்திரத்தில் தான் இருந்தது என்பதற்கு சில சான்றுகள்(!) கூறியிருந்தேன். முக்கியமான ஒரு காரணத்தை கூற மறந்துவிட்டேன்.
ஆபிரிக்கா கண்டத்தில் மேற்கே காணப்படும் மலைத்தொடரானது தென்னமெரிக்கா கண்டத்தில் கிழக்கே காணப்படும் மலைகளுடன் ஒத்து போகக்கூடியதாக இருக்கிறதாம்.( அதாவது இரண்டினதும் சமுத்திரத்தை நோக்கிய பக்கங்களிலுள்ள சரிவுகள் ஒன்றை ஒன்றுடன் இணைக்க கூடியதாக இருக்கின்றதாம்.) இது நிகழ்காலத்தில் பார்த்தறியக்கூடிய ஒரு விடையம்.
ஆகவே, இந்து சமுத்திரத்தில் தான் லெமூரியா இருந்திருக்கும் என்பது தெளிவாகுகிறது. (மாற்றுக்கருத்துக்கள் அல்லது இந்து சமுத்திரத்தில் இருந்தமைக்கான வெறு சான்றுகள் வாசகர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.)

இனி “லெமூரியா” எப்படி அழிந்திருக்கும் என பார்க்கப்போனால் எனக்கு பல காரண்ங்கள் தோன்றுகின்றன…
அவ‌ற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம். (இத்தொடரை நான் உடனுக்குடன் ரைப் பண்ணுவதால் சில சமையங்களில் ஒரு ஒழுங்குமுறை காணப்படாது. அதையெல்லாம் பெரிய விடையமாக எடுக்காதீர்கள்!(???))
கண்ட நகர்வு இதை பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள்…
அதாவது பூமியில் பல தட்டுக்கள் காணப்படுகின்றன (அந்த தட்டுக்களின் மேல் தான் நாம் வாழும் நாடுகள், கடல்கள் என்ப இருக்கின்றன.) அந்த தட்டுக்கள் நிலையாக இல்லாமல் நகர்ந்து கொண்டுள்ளன. என்பது அனைவருக்கும் பொதுவாக தெரிந்த ஒரு விடையம். ஆனால் இன்னொரு முக்கியமான விஷையம் என்னவென்றால்… அத்தட்டுக்கள் சாதாரண‌மாக நகராமல் ஒரு சிறிய(!!!???) மேல் கீழான அசைவினையும் கொண்டுள்ளன. ( நாங்கள் விளையாடிய “ஸீஸோ” விளையாட்டுமாதிரி) அத்தோடு ஒவ்வொரு தட்டிற்கும் இந்த நகர்வுவேகம்,அசைவு வேகம் என்பன மாறுபட்டிருக்கின்றது.
(மேற் கூறியதெல்லாம் நிரூபிக்கப்பட்ட உண்மைகள்)
இந்த தட்டுக்களின் நகர்வினாலேயே இமைய மலையின் உயரம் வருடா வருடம் ஒரு சிறிய அதிகரிப்பை காட்டுகிறது. (என்னை பொறுத்தவரையில் எவெறெஸ்ட் சிகரத்தில் உயர அதிகரிப்பு தெரிய வாய்ப்பில்லை. காரணம், புவி வெப்பமடைவதன் காரணமாக பனி உருகுகிறது… ஆகவே நகர்வினால் ஏற்படுத்தப்படும் உயர்வு கணிக்க முடியாதிருக்கலாம்) இங்கு இமயமலையின் கீழ் இரு தட்டுக்கள் பொருந்தியுள்ளன என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
இந்த இமயமலை தோன்றியதே இரண்டு தட்டுக்கள் ஒன்றுடனொன்று முட்டி மோதியதால் தான்!
(இமயமலைப்பகுதியிலுள்ள பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது நம்பாதவர்களுக்காக)
சுனாமி ஏற்பட்டதும் இரு தட்டுக்களின் முறுகல் தான்!

லெமூரியா-1

செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது. இல்லாத மதத்தின் பெயர் இந்து!

செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது.
இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன்






பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம்.
இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு.
சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல.
சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது.
சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது.
‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication)
ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்)
சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும்.
அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை.
இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன.
ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது.
இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர்.
ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது.
குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை.
பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன.
பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன.
பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர்.
பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை.
கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள்.
கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள்.
கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர்.
சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது.
தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம்.
பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது.
இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும்.
இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே!
சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது.
ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம்.
இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல.
புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம்.
சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம்.
வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர்.
உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை.
தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும்.
தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை.
சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்!
ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும்.
நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன