Saturday, 10 September 2016

கரீபியன் தீவுகளில் தமிழர்


 
 
 
 
கரீபியன் பகுதி அமெரிக்கக் குடியரசு, இலத்தின் அமெரிக்க நாடுகளின் அருகில் இருக்கிறது. இப்பகுதியில் டிரினிடாட், டொபாகோ கயானா, சூரிநாம், ஜமைக்கா, கிரெனடா, குவாடிலோப், மார்தினீக், அங்குயிலா போன்ற நாடுகள் இருக்கின்றன. வெளிசூலா கடற்கரை அருகிலேயே டிரினிடாட், டொபாகோ முதலிய இரண்டு தீவுகள் இருக்கின்றன. இவை தென் அமெரிக்கத் தலைநிலப்பரப்புப் பகுதியில் இருக்கின்றன. கயானாவின் மேற்கே வெனிசூலாவும், கிழக்கே சூரிநாமும், தெற்கே பிரேசில் நாடும் இருக்கின்றன. டச்சு கயானா என்று அழைக்கப்படும் சூரிநாம், பிரேசில், கயானா அருகில் இருக்கிறது. கரீபியன் பகுதியில் பரப்பளவில் மூன்றாவது இடத்தை ஜமைக்கா பிடித்திருக்கிறது. ஜமைக்கா, கியூபா நாட்டின் அருகில் இருக்கிறது.

தமிழர் குடியேறிய வரலாறு :

கரீபிய நாடுகளில் தமிழர்களுக்கு முன்பாக தோட்டங்களில் ஆப்ரிக்கர்களே வேலை செய்து வந்தனர். 1834-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் ஆப்ரிக்கர்களின் அடிமைவாழ்வு முடிந்து தோட்டங்களைவிட்டு வெளியேறியவுடன், வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியாவிலிருந்து பிரஞ்சு குடியேற்றங்களுக்கு நிறையபேர் அனுப்பப்படுவதை கேள்விப்பட்ட ஆங்கிலேயர்கள் தாமும், இந்தியாவிலிருந் தொழிலாளர்களை இறக்குமதி செய்தனர். இதன் விளைவாக 1938-ஆம் ஆண்டு இந்தியக் கூலிகள் கயானாவுக்கு அழைத்துவரப்பட்டனர். பிறகு 1845-ஆம் ஆண்டு டிரினிடாட் டுபாக்கோவிலும், 1873-ஆம் ஆண்டு சூரிநாம், ஜமைக்கா நாடுகளுக்கும் இந்தியக் கூலிகள் கொண்டு வரப்பட்டனர். இவ்வாறு வந்திறங்கிய இந்தியக் கூலிகள் சிலர் இத்தீவுகளிலிருந்து கிரானடா நாட்டிற்கும் சென்றனர். கயானாவிலிருந்து இரண்டு பெரிய தோட்ட முதலாளியான ஜான் கிளாட்ஸ்டோன், கிளினெல்பிரபு என்பவரின் துணையோடு இந்தியாவிலிருந்து ஒப்பந்தக் கூலிகளைக் கொண்டுவரத் தொடங்கினார். இதன் பயனால் 156 ஒப்பந்தக் கூலிகள் இந்தியாவிலிருந்து கிளம்பி ஹெஸ்பரஸ் என்னும் கப்பலில் 1838-ஆம் ஆண்டு கயானாவில் வந்து இறங்கிய கூலிகள் மொத்தம் 156 பேர். அதே மாதத்தில் விட்பை என்னும் கப்பலும் 263 கூலிகளைக் கொண்டு வந்து இறக்கியது. முதற் கப்பல் கொண்டு வந்த கூலிகளைக் தோட்ட முதலாளியான கிளாட்ஸ்டோன் டெமராரா நதிக் கரையில் உள்ள வி.எம்.வூப், வீடஸ்டீன் என்ற தோட்டங்களுக்கும் எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள அன்னாரி ஜ"னாவிற்கும் அனுப்பி வைத்தார். விட்பை ஏற்றி வந்த கூலிகளை டெமராராவில் உள்ள பெலிவ்யூ என்னும் தோட்டத்திற்கும், எசிக்யூபோ நதிக்கரையில் உள்ள ஹைபரி, வாடர்லூ என்னும் தோட்டங்களுக்கும் அனுப்பி வைத்தார். இவ்வாறு 1838-ஆம் ஆண்டில் தொடங்கிய இந்தியக் கூலிகளின் கயானா வருகை 1917-ஆம் ஆண்டோடு முடிவடைந்தது. இந்த என்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வந்த கூலிகள் பலர் மேற்கிந்தியத் தீவுகளான டிரினிடாட், ஜமைக்கா, செயிண்ட் லூசியா, குவாடிலோப், மார்த்தினிக்கிற்கும், கயானாவின் கிழக்கில் உள்ள சூரிநாமிற்கும் அனுப்பப்பட்டனர். 1838-ஆம் ஆண்டு தொடங்கி 1917-ஆம் ஆண்டு வரை கயானாவிற்கு மட்டும் வந்த இந்தியர்களின் தொகை 2,38,979 ஆகும்.

டிரினிடாட் :

டிரினிடாட்டிற்கு முதன் முதலாக 1845-இல் இந்தியர்கள் வந்து குடியேறினார்கள். பேட்டல் ரோசாக் எனும் கப்பலில் 1845-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் நாள் போர்ட் ஆப் ஸ்பைன் துறைமுகத்தில் முதலாவது வந்த 225 இந்தியர்கள் இறங்கினார்கள். இந்தியர்கள் முதல் முதலாக டிரினிடாட்டிற்கு வந்த தினம் முதல் முறையாக 1978-இல் கொண்டாடப்பட்டது.

ஜமைக்கா :
1845-ஆம் ஆண்டு மே திங்கள் 9-ஆம் நாள் 200 இந்திய ஆண்கள், 28 இந்திய பெண்கள், 16 சிறுவர்கள் செயிண்ட் கேதரைனிலுள்ள பழைய துறைமுகத்தில் முதன் முதலாக வந்திறங்கினார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 4,550 இந்தியர்கள் ஜமைக்காவில் வந்து குடியேறினார்கள். 1845-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே 36,412 இந்தியர்கள் ஜமைக்காவிற்கு வந்து குடியேறினார்கள்.

சூரிநாம் :

தென் அமெரிக்கத் தலை நிலப்பரப்பிலிருக்கும் சூரிநாம் மட்டும் டச்சுக்குடியேற்றப் பகுதியாக இருந்தது. 1853-1939 ஆம் ஆண்டுகளுக்கிடையே ஒப்பந்தம் செய்துகொண்ட 74,000 கூலிகள் சூரிநாமிற்குக் கொண்டுவரப்பட்டனர். இதில் இந்தியாவிலிருந்து சென்றவர்கள் 46% பேர்கள்.

கிரானடா :

1857-1917 ஆம் ஆண்டுகளுக்கிடையே சுமார் 2,750 இந்தியக் கூலியாட்கள் இத்தீவிற்கு வந்து குடியேறினார்கள். இவர்கள் பிற கரீபியன் தீவுகளிலிருந்து கொண்டு வரப்பட்டனர். ஆனாலும் தேவைக்கேற்ப மிகுதியான கூலியாட்கள் கிடைக்காததால், பல கரும்புத் தோட்டங்கள் வளர்ச்சியடைந்த போதிலும், பொதுவாக இத்தீவின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் தோன்றவில்லை.

மார்டினிக்தீவு :

காரைக்கால், பாண்டிச்சேரி பகுதியிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக 10,063 பேர் 1874-ஆம் ஆண்டில் மார்டினிக் சென்றுள்ளனர். இங்கிருந்து குவாடலோப் முதலிய தீவுகளுக்கும் சென்றுள்ளனர்.

தமிழரின் இன்றைய நிலை

சமயம் :

கரீபிய நாடுகளில் மாரியம்மன், காளி, மதுரை வீரன் கோயில்கள் கட்டாயம் இருக்கும். ஏனெனில் தொழிலாளர்களாக சென்ற தமிழர்களில் முக்கால்வாசிபேர் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து சென்றவர்கள். மற்றும் சிலர் மதம்மாறி கிறிஸ்தவர்களானார்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் இத்தெய்வங்களைக் காணலாம். இந்துக் கோயில்களைக்கூட "சர்ச்" என்றே அழைக்கின்றனர். பெரும்பான்மையான கோயில்கள் சர்ச் பாணியிலேயே இருக்கின்றன. சிலைகளுக்கு பதிலாக படங்களே இருக்கின்றன. 'சேவலை' காவு கொடுக்கும் வழக்கமும்; வேலாடும் வழக்கமும் இருக்கின்றன. சாதிப்பேய் அங்கேயும் இருக்கிறது. கோவிலில் சிலரை உள்ளே அனுமதிப்பதில்லை. கயானாவில் பெர்பீஸ் பகுதியில் இவ்வழக்கம் இருப்பதாக ஈசா. விசுவநாதன் தெரிவிக்கிறார். மாரியம்மன் தாலாட்டு, சிலக்குத்து என்னும் நூலிலுள்ள பாடல்களை பாடுகின்றனர். ஒரு வரியை ஒருவர் வாசிக்க மற்றவர்கள் பின்பற்றும் கிருத்துவ முறை காணப்படுகிறது. பக்தர்களுக்கு சுண்டல், வடை உண்டு.

சாமிமீதேறப் பெற்றவர் 'வெறியாடும்' வழக்கம் இருக்கிறது. அப்போது 'குறி'யும் சொல்லப் படுகிறது. நோயுற்றோருக்கு மந்திரம் ஜெபித்து, தண் ர் தெளித்து வேப்பிலை அடிப்பதோடு, நாட்டு மருத்துவமும் செய்கின்றனர். இத்தகைய கோயில்களுக்கு எல்லோரும் வருகின்றனர். கொரன்டீனிலுள்ள ரோஸ்ஹால் கோயிலை நடத்துபவர் ஓர் ஆப்ரிக்கர்; ஹெர்ஸ்டெலிங் கோயிலில் குறிசொல்பவர் ஒரு முஸ்லீம், மதராசிகள் (தமிழர்) நடத்தும் இக்கோயில்கள் வெறும் வழிபாட்டுக் கோயில்களாக இல்லாமல் நோய் தீர்க்கும் மருத்துவ நிலையங்களாகவும் உள்ளன. கிரானடாத் தமிழர்கள் அனைவரும் கிருத்துவர்களாக மாறி விட்டனர். சூரிநாமில் இந்துக்கள் வட இந்திய முறைப்படி வழிபாடு செய்கின்றனர். ஜமைக்கா, குவாடலுப் போன்ற நாடுகளில் மதம்மாறி விட்டாலும் ஒவ்வொரு நாட்டிலும் முறையே 500 குடும்பங்கள் இருப்பதாக 1987-ஆம் ஆண்டு கணக்கெடுத்துள்ளனர். மார்ட்டினிக் தீவில் இன்றும் ஏராளமான தமிழர்கள் தமிழக முறைப்படி வழிபட்டு வருகின்றனர். இந்துக் கோயில்கள் மௌலின், கிராடிஸ், மாகௌபா முதலிய ஏழு இடங்களில் இருந்ததாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார். 16 அடி உயரத்தில் இலிங்கம் மௌலின் கோயிலில் இருந்ததாக தெரிவிக்கிறார். மார்ட்டினிக்கில் தமிழக முஸ்லீம்களும் பெருமளவு குடியேறி இருந்தனர். நாகூர் மீரான் ஆண்டவருக்கு அங்கு ஒரு நினைவு பள்ளி இருந்ததாக வின்சென்ட் சாய்பு தனிநாயகம் அடிகளிடம் தெரிவித்துள்ளார் சாயுபு கூட வின்சென்ட் ஆகியிருப்பதிலிந்து நிலமையை உணரலாம்.

உணவு-உடை-தகவல் தொடர்பு:

பெரும்பாலான பெண்கள் இன்று நீக்ரோக்கள் உடையையும், கௌனையுமே அணிகின்றனர். ஆண்கள் வேட்டி கட்டும் பழக்கமே இல்லை. அமெரிக்க உடைகளே வழக்கில் இருக்கின்றன. உணவும்கூட ஆங்கில, பிரஞ்சு முறைப்படி இருந்தாலும் சமயசடங்கு நேரத்தில் மட்டும் சுண்டல், வடை முதலியவை செய்யப்படுகின்றன. காய்போட்டு காய்ச்சும் குழம்பை 'கொலம்போ' என்று அழைக்கின்றனர். புலவு, பிரியாணிக்கு கரீபியர்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், முக்கிய உணவிடங்களில் கூட பிரியாணிக்கு செல்வாக்கிருப்பதாக தனிநாயகம் அடிகள் தெரிவிக்கிறார். இந்தியப் படங்களை வீடியோ நாடாக்கள் மூலம் பார்த்து வருகின்றனர். கரீபிய நாடுகளில் தமிழ் இதழ்கள் எங்கும் நடத்தப்படவில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கரீபிய நாடுகளுக்குச் சென்ற தமிழர்கள் பலரும் படிப்பறிவில்லாத கிராமப்புற தொழிலாளர்கள் தங்கள் வேலை நேரம் போக மற்ற விடுமுறை காலங்களில் தமிழகத்தில் தாங்கள் பார்த்து கேட்டு அனுபவித்த நாடகங்களை அங்கு நடத்தியதை பல ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அருணாசல கவிராயரின் இராமநாடகம், தேசிங்குராசன் நாடகம், இரண்யன் நாடகம், அல்லாபாஷா நாடகம் போன்றவையும், இராமாயண, மகாபாரத கிளைக் கதைகளை நடித்ததையும் டி.டபிள்யூ.டி கொமின்ஸ் தம் நூலில் தெரிவித்துள்ளார். தமிழர்கள் பாடிய பல நாட்டுப்பாடல்களின் மெட்டுக்களை ஆப்ரிக்கர்கள் தங்கள் கிரியோல் மொழிப் பாடல்களில் கேட்கலாம். சில பாடல்களின் இறுதி அடிகளில் சின்னமுத்தம்மா, பெரியமுத்தம்மா என முடிவதிலிருந்து அறிகிறோம்.

தமிழ்மொழியின் நிலை

கரீபிய நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இன்று யாருக்கும் தமிழ் தெரியாது. ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிஷ், கிரியோல் பேசுபவர்களாக மாறிப்போய் விட்டனர். தமிழர்களுடைய பெயர்களை எழுதிய பல்வேறு நாட்டு தோட்ட முதலாளிகள் அவரவர் மொழிக்கேற்ப மாற்றி எழுதி வைத்துள்ளனர். அதை மாற்றாமல் பல தமிழர்களும் அப்படியே வைத்துக் கொண்டுள்ளனர்.ராம்சமி சின்னபேன் - ராமசாமி சின்னப்பன்

மரியாய் - மாரியம்மா

வெள்ளினி - வள்ளி

-என மாறி இருக்கிறது. இந்துக்களாக இருப்பவர்கள் கூட தங்கள் பெயரின் பின் ஜான், ஜோசப் முதலிய கிருத்துவப் பெயர்களுடனே இருப்பது வியப்பாக இருக்கிறது. கயானாவில் தமிழர்கள் 60 ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். கங்காராம், ரோஸ்ஹால், ஆல்பியன் போன்ற பெர்பீஸ்-கொரன்டீன் பகுதியில் உள்ள ஊர்களிலும், மேற்கு டெமராராவில் உள்ள ஸ்டுவர்ட் வில்லிலும், ட்ரையம்பிலும் நூறுகுடும்பங்கள் இருப்பதாக விசுவநாதன் தெரிவிக்கிறார்.

கல்வி நிலை :

"தம் தாய்மொழியை யார் மறக்கிறார்களோ அவர்கள் தம் பண்பாட்டையும் மறக்கின்றார்கள்" என்று கயனாநாட்டு நோயல் மெனீஸ் கூறுகிறார். இன உணர்வையும், மொழியையும் இழந்த தமிழர்கள் இன்று அந்தந்த நாட்டு மொழியைதான் படிக்கின்றனர். மொழி இழந்ததால் அவர்களிடம் இலக்கியமும் போய்விட்டது. ஆப்ரிக்கர்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட போதும் தங்கள் வாய்மொழி இலக்கியத்தை விடாமல் இருந்ததை தமிழர்கள் இனியாகிலும் உணரத்தான் வேண்டும்.

அமைப்புக்கள் :

ஜமைக்காவில் மட்டும் 8 இந்திய அமைப்புக்கள் இருக்கின்றன. மற்ற நாடுகளின் விபரங்கள் அறிய முடியவில்லை.

தமிழர் சாதனைகள்
கயானாவில் மருத்துவத் துறையில் புகழ்பெற்று விளங்கும் ஒருசிலரில் திரு.லெஸ்வி முத்து என்னும் தமிழர் குறிப்பிடத்தக்கவர். இவர் ஜார்ஜ் (தலைநகரம்) டவுனில் மருத்துவராக உள்ளார். திரு. சாமி என்பவர் வியாபாரத் துறையில் செல்வாக்கு பெற்றிருப்பதோடு, இந்த நாட்டில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராக திகழ்கிறார். கல்வித்துறையில் டாக்டர்.ஜே.ஆர் ராமசாமி, கயானாப் பல்கலைக் கழகத்தில் உயிர்நூல் துறையில் பணியாற்றுகிறார் இவருடைய தம்பி டாக்டர் ஹெர்னன் ராமசாமி என்பவர் செல்வாக்குள்ள மருத்துவர்களில் ஒருவராக கொரன்டீன் பகுதியில் இருக்கிறார். அரசு அதிகாரியாக வேலையில் இருக்கும் ஒருநபர் ஜேம்ஸ் நாயுடு ஆவார்.

ஜமைக்காவில் 1950 வரை காய்கறிகளின் ஏகபோக உரிமை தமிழர்களிடமே இருந்தன. ஜமைக்கா பாராளுமன்றத்தில் 3 உறுப்பினர்கள் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்/தொழில் புரிவோர் விபரங்கள் :

கயானாவில் வாழும் தமிழரில் 85% விழுக்காட்டினர் தோட்டங்களிலும், சிற்றூர்களிலும் வாழ்கின்றனர். பொறியியல் வினைஞர்களாகவும், நர்சு, ஆசிரியர்களாக சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக வாழ்கின்றனர். நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளின் காரணமாக அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் சென்று விட்டதாக இங்குள் தமிழர்கள் கூறுகிறார்கள். அவர்கள் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் பெரும்பாலான தமிழ்க் குடும்பங்களில் குறைந்தது ஒருவராகிலும் அமெரிக்காவிலோ கனடாவிலோ, பிரிட்டனிலோ வாழ்ந்து வருகின்றனர். சூரிநாமில் சரபாச்சா, நிக்கெரி மாவட்டங்களில் சிறுவிவசாயிகளாகவும், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலிலும் இவர்களின் பங்கு உள்ளது. ஜமைக்காவில் விவசாயத்திலும் வியாபாரத்திலும் இருக்கின்றனர். கிரனடாவில் கரும்புத் தோட்டங்களி பணிபுரிகின்றனர். கரீபிய நாடுகளில் தமிழர்கள் பண்பாட்டை முதலில் வட இந்தியரிடம் இழந்தனர். பின்னர் அந்தந்த நாட்டு மொழி, பண்பாடுகளால் விழுங்கப்பட்டவர்களாக இன்று வாழ்கின்றனர். இன்றைய இளம் தமிழர்கள் தமிழ்மொழி, பண்பாடு, வரலாறு பற்றி அறிந்து கொள்ள ஆர்வத்துடன் உள்ளனர். இந்திய அரசாங்கம் உலகில் உள்ள நான்கு நாடுகளில் (கயானா, சுரிநாம், பீஜி, மொரீசியஸ்) இந்திய பண்பாட்டு மையம் (Indian cultural centre) நிறுவி அதன் மூலம் இந்திமொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை பரப்பி வருகிறது. அதுபோல தமிழக அரசும் தமிழர்கள் அதிகமாக அந்நாடுகளில் வாழ்வதால் தமிழ்மொழி, பண்பாடு, கலைகள் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்கிறார் விசுவநாதன். ஒட்டுமொத்த தமிழரின் விருப்பமும் இது என தமிழக அரசு உணரவேண்டும்.

தொகுப்பு : ப. திருநாவுக்கரசு

உதவிய நூல்கள் :

1. Tamil Emigration to Martinique - Fr. Thaninayagam.

2. பாரெல்லாம் பரந்த தமிழர் - ஈசா. விசுவநாதன்.

3. அயல்நாடுகளில் தமிழர் - நாகராஜன்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!



 
 சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

குப்லாய் கான் (Kublai Khan)

சூவன்லிசௌ துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்

கடலுக்கடியில் பூம்புகார்...

கடலுக்கடியில் பூம்புகார்...



பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.


பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.



வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”



இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா?



உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.



தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா?



அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை? கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.



இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்



2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு



3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு



4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்



5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். ( தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )



1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.



2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.



3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.



4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.



5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.



தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை.



ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்? # பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது.



இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?



# இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?



# புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute Of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD )


 
 
 
 
 
 
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம்.

 எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது.

படத்தில் நீங்கள் பார்ப்பது ஏதோ ஒரு இடிந்து போன சாதாரண கட்டிடம் அல்ல, தமிழகத்திலேயே இதுவரை கண்டுபிடிகப்பட்டுள்ள மிகப்பழமையான கோயிலில் முதல் இடம் பிடித்திருப்பது இது தான், அதாவது கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்!. (Sangam period) (3rd century BC to the 3rd century AD ), அடித்தளத்தில் இருக்கும் செங்கல் கட்டுமானம் சங்க காலத்தை சேர்ந்தது, இந்த இடத்தை நேரில் சென்று பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது, செங்கற்கள் ஒவ்வொன்றும் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது. இந்த சங்க கால கட்டிடம் சுனாமியால் அழிந்ததையொட்டி, இதில் பல்லவர்கள் இந்த செங்கல் கட்டுமானத்தை அப்படியே அடித்தளமாக வைத்து அதன் மீது கற்றளியை எழுப்பியுள்ளனர், அதன் பின்னர் சோழர் காலத்திலும் திருப்பணிகள் நடந்துள்ளது. பின்னர் அதுவும் ஒரு சுனாமியால் அழிந்து தற்போது அதே சங்ககால அடித்தளமே மீதம் உள்ளது. அதை மிக சிறப்பாக தற்போது தோண்டி எடுக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றது தொல்லியல் துறை. இந்த செங்கற்கள் சங்க கால இடங்களான "பூம்புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு" ஆகிய இடங்களில் கிடைக்கபெற்ற கற்களோடு ஒத்துப்போகின்றது."சிலப்பதிகாரத்தில்" கூறப்பட்டுள்ள "குறவன் கூத்து" பற்றிய மண் சிற்பங்களும் இங்கு கிடைக்கபெற்றுள்ளது.

கோவிலின் முன் புறத்தில் கல்லிலேயே செய்யப்பட்ட முருகனின் வேல் ஒன்று உள்ளது, சுடுமண்ணால் ஆன ஒரு நந்தி, ஒரு பெண்ணின் சிலை, விளக்குகள், சிவ லிங்கம், சோழர்களின் செப்பு காசு போன்ற ஏகப்பட்ட சங்க காலத்திய பொருட்கள் கிடைத்துள்ளது. இங்கு கிடைக்கப்பெற்ற இந்த ஒரு நந்தி தான் சுடுமண்ணால் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு நாகரிகமாக வாழ்ந்திருக்கிறோம் என்பது புரியும். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய இடம், நாம் நிற்கும் இதே இடத்தில் தானே இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் இனத்தாரும் நின்று இதை கட்டியிருப்பார்கள் என்ற உணர்வோடு பாருங்கள், மிகுந்த பூரிப்போடு இருக்கும்

ஆதித்த கரிகாலன் (இராஜராஜ சோழனின் அண்ணன்)!!




ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான்.

ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.


குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான் என்றும் 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாகவும், இராஜகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. இந்த இராஜகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராஜராஜ சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5-ம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராஜராஜ சோழனுடையது என்பது தெளிவாகிறது.

உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பது உண்மையே. மகனை இழந்த சுந்தரசோழன், ஒன்று மனம் நொந்து இறந்தான் அல்லது தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.

சூழ்நிலைகளை உற்று நோக்கும் போது உத்தமசோழனுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இல்லையென்று கூறுவதற்கில்லை. உத்தமசோழனுக்கு, அரியணை ஏற வேண்டும் என்ற ஆசை இருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை, அரச குடும்பத்தின் மூத்த கிளை என்று அவன் கருதினான். தன் ஒன்று விட்ட சகோதரனும் அவன் மக்களும் அரியணையைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகக் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத்திரட்டி இரண்டாம் ஆதித்தனைக் கொன்று தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு இசைந்தான். திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்க்குடிக் கல்வெட்டுகளிலும் காணப்படும் குறிப்புக்களை இணைத்துபார்க்கும் பொழுது இந்த நிகழ்ச்சிகள் உண்மையாக இருக்கக்கூடும் என்பது புலனாகிறது.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான்.

இராவணன் யார்??வால்மீகி சொல்லாத ராவணன் கதை!!


Image result for raavanan lord

விமானத்தை உலகிற்கு அறிமுகப்படு த்தியவர்கள் யார் என்றால் வில்வர்,ஒலிவர் என்ற ரைட் சகோதரர் என்றே பதிலிருக்கும்.உண்மையில் அதற்கு முன்னே ராமாயாணத்தில் சீதையை ராவணன் புஷ்பகவிமானத்தில் கடத்தியதாக வால்மீகி எழுதியுள்ளார்,அதை கம்பனும் மிகைப்படுத்தி வர்ணிக்கின்றார்.உண்மையில் வச்சிரவாணன்,சிவதாசன் சகோதரரே ஆரம்ப கண்டுபிடிப்பாளராம்!


சுகேசன் என்பவன் குமரிக்கண்டத்தில் உள்ள பெரிய மலையில் கோட்டையமைத்து ஒரு பேரரசை ஆண்டுவந்தான்,அவன் மகேந்திரமலை அல்லது மணிமலை என்றழைக்கப்பட்ட நாகர்குல தெய்வவதியை திருமணம் செய்து மாலி`யாவான்`,சுமாலி என்ற புத்திரரை பெற்றான்.உரிய பிராயத்தில் மாலி அரசனானான்.இவன் பத்து நாடுகளை வென்று ஒரே கிரீடத்தில் பத்து நாட்டு முடிகளையும் இணைத்து அணிந்திருந்தான்.இலங்கையை மிக அழகாக சிறப்பாக ஆண்டான்.
சுமாலியும் மாதோட்ட நாகர்குல இளவரசி கேதுமதியை மணந்திருந்தான்.இவர்களுக்கு ஆண்பிள்ளை இல்லை,ஒரே மகள் கைகேசி.இதனால் கேதுமதியின் அண்ணனும் புலஸ்தியர் குணவதியின் புதல்வனுமான வச்சிரவாகு ஆட்சிக்கு வந்தான்.வச்சிரவாகு அழகாபுரி இயக்கற்குல தேவகன்னி என்ற இளவரசியை மணந்து வச்சிரவாணனை பெற்றான்.தந்தைக்குப்பின் இவன் ஆட்சிக்கு வந்து அழகாபுரியையும் இலங்காபுரியையும் ஆண்டான்.பொன்னும் பொருளும் இவனிடம் குவிந்திருந்ததாலும் பெரிய தேசத்தை ஆண்டதாலும் இவனுக்கு குபேரன் என்ற புகழ்ப்பெயர் காலப்போக்கில் ஏற்படலாயிற்று??!!.இவனே சூரியப் பிரகாசம் புஷ்பகவிமானம் என்ற இரு கடல் விமானங்களை விஸ்வகர்மா மூலம் அமைத்திருந்தான்.நாட்டை கட்டிய சிற்பியும் அவரே!!இம்மன்னன் காலத்திலேயே ஈழத்தில் முதன்முதலில் சிவன்கோயில்கள் அமைக்கப் பட்டதாக அறியப்படுகிறது.


வச்சிரவாகு தங்கை கொதுமதி சுமாலி மகளான கைகேசியை இரண்டாம் தாரமாக மணந்து சிவதாசன்(ராவணன்),பரமன்(கும்பகர்ணன்),பசுபதி(விபூஷணன்),உமையம்மை(சூர்ப்பனகை)என்பவர்களை பெற்றான்.வச்சிரவாணன் இலங்காபுரியின் ஆட்சி உரிமைக்குரிய சிவதாசனிடம் நாட்டையும் புஷ்பகவிமானத்தையும் கொடுத்துவிட்டு அழகாபுரிக்கு சென்று அதை சிறப்பாக ஆண்டான்.சிவதாசன் மண்டோதரியை மணந்து தம்பிகள் மற்றும் தங்கை மாமாக்கள் மாரீசன் போன்றோரின் துணையுடன் இலங்கையை சீதையை காணும் வரை சிறப்புடன் ஆண்டான்.இவன் கலைகளில் வித்தகன்,வீணையில் இவனை வெல்ல யாருமில்லாதவன்.இவனது புகழை வால்மீகிமட்டுமல்லாது கம்பனும் ராமன் வாயிலாக புகழ்கின்றனர்.சிவா பக்தனான இவன் இமயத்தை பெயர்த்து இலங்கைக்கு கொண்டுவர முயன்றதாக கதையும் உண்டு.கோணமலையில் இராவணன் வெட்டும் ஏழு கிணறும் இவன் கதை சொல்லும்.தேவாரத்தில் இவன்பற்றிய பாடல்கள் உள்ளன.


நன்றி சிவமேனகை!!
பிரதி எடுத்துப் போடுகிறேன் என்பதால் அதை தடைப் படுத்திய தமிழர்களை விட ,ஆரியர் என்றால் உயர்ந்தவர்கள் என்பது அர்த்தம் என்பதை உணர்ந்தும் தவறான கருத்துக்களை மக்களிடம் விதைக்கும் விசங்களை விட மனிதன் குரங்கிலிருந்தே வந்தான் என்ற விஞ்ஞானத்தை ஏற்றவருக்கு தமிழனே முதற்சந்ததி என்றதே ராமாயணம் என்பதால் பெருமைதானே.இன்று தேவரும் இல்லை,அசுரரும் இல்லை.குரங்கால் வந்த மனிதனே உள்ளான்.அதன் ஆரம்பம் அறிவிலும் வீரத்திலும் சிறந்த சுக்ரீவன்,வாலி,மாருதி,ஜாம்பவான் இன்னும் பல குரங்குகளே!!

இராவணன் ஒரு தமிழ் வீரன்


Image result for raavanan lord
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..
உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.

இராவணன்
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன
இராமாயணத்தில் இராவணன்
இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், "நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்" என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்
குடும்பம்

இராவணனது தந்தை வைச்ரவ மகரிஷி ஆவார். வீடணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை ஆகியோர் உடன் பிறப்புகளாவர்
வேத வித்தகன்

இராவணன் சாம வேதத்தில் நிபுணத்துவம் பெற்றவன். இதனை இராமாயணமே எடுத்தியம்புகிறது. இவன் தனது கை நரம்புகளால் சாம கானம் பாடி சிவனை மகிழ்வித்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது.
கைலாயத்தைத் தூக்கும் இராவணன் (இராவணன், பத்துத் தலை கொண்ட இலங்கை அரசன். இராமனுக்கு எதிரியான இவன் மிகச் சிறந்த சிவபக்தன். புராணங்களில் இராட்சசனாகச் சித்தரிக்கப் படுபவன்.)

கைலாயத்தை தன் நாட்டில் வைக்க விரும்பிய இராவணன் வடக்கே சென்று, எந்த வித கடினமும் இல்லாமல் இமயத்தைத் தூக்கி தன் நாடு நோக்கி நடந்தான். மலையில் திடீரென ஏற்பட்ட ஆட்டத்தை உணர்ந்த பார்வதி தேவி பாதுகாப்பு வேண்டி சிவனிடம் ஓட, நடந்ததை அறிந்த சிவன், இராவணனுக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பி தன் இடது கட்டைவிரலால் மலையை சற்று அழுத்த, தப்பிக்க வழியின்றி கீழே மாட்டிக் கொண்டான் இராவணன். ஆனால் சிவபக்தர்களுக்குத் தெரியும் சிவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று. தன் தொடை நரம்பினால் வீணை போன்ற ஏற்பாடு செய்து, சாம வேதப் பாடல்களைப் பாட, மனம் இரங்கினார் சிவ பெருமான், இராவணனைச் செல்ல அனுமதித்தார். மற்ற தெய்வங்களுக்கு சொல்லப்படாத சிறப்பு இதுவே. சிவபெருமானுக்கும் அவர்தம் அடியார்களுக்கும் மிகச் சிறந்த உறவு உண்டு. ஒருத்தரை யொருத்தர் மதிக்கும் பண்பு வந்துவிட்டார் ஏது இங்கே பிரச்சினைகள்?

இராவணன் நீர்வீழ்ச்சி

இராவணன் நீர்வீழ்ச்சி இலங்கையின் ஊவா மாகாணத்தில் கிரிந்தி ஆற்றில் அமைந்துள்ள ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது எல்லை - வெள்ளவாயா பெருந்தெருவிற்கு அருகே அமைந்துள்ளது. பாதையில் இருந்தபடியே இதனை பார்வையிடமுடியும். இதன் நீர் ஊற்று வெவதன்னை மேட்டுநிலக்காடாகும். நீர்வீழ்ச்சி மூன்று படிநிலைகளில் பாய்கிறது. முக்கிய பாய்ச்சல் 9 மீட்டர் (30 அடி) மட்டுமேயாகும். நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அறிப்பு துரிதமாக நடைபெறுகின்றது.
மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி என்று கருதப்படுகின்றது. இதன் அருகே ராட்சதலம் ஏரியும் உள்ளது. இந்த ராட்சதலம் ஏரியில் இருந்து இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது.

இராவணன் நீர் வீழ்ச்சி இராமாயணத்தோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.

இராவணன் காலத்து ஆலயங்கள்
இந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. அக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன்.

"வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். " இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது. சுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.

இதைவிட.....இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது.

இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.

திருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றது.

திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். இதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம்.

இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும். இவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன்.

இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்.... தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன. உதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம்.

இராவணன் வெட்டு

படத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.
சிகிரியாக் குன்றம்

சிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்.... இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.

இராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.
இராவணன் ஆட்சி

மகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன. இவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி மேலாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை.
இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்... அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம்.

புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன. அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது.

இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது. இடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.

குமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:-
- சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது.

- ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.
அழிவுற்றது எனக்கருதப்பவும் குமரிக்கண்டம்
பின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள்.

சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள். எனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள்.
இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்... திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.

இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்
- சயம்பன்
- சயம்பனின் மருமகன் யாளிமுகன்
- ஏதி
- ஏதியின் மகன் வித்துகேசன்
- வித்துகேசனின் மகன் சுகேசன்
- சுகேசனின் மகன் மாலியவான்
- மாலியவான் தம்பி சுமாலி
- குபேரன்

இராவணன் ஆட்சி

அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.
குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்.