Saturday, 10 September 2016

ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிக்கிள் பற்றி அன்றே திருமூலர் கூறிவிட்டார்

Image result for higgs boson particle சிவ





இன்று உலகம் தேடிகொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நாம் காண இருக்கிறோம் அதற்கு முதலில் பல ஆயிரம் ஆண்டு முன் வாழ்ந்த திருமூலர் சொல்லிய திருமந்திரத்தில் இருந்து ஒரு தொகுப்பு இங்கே பார்போம்

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறுநா றாரயிரத்து ஒன்றே
-திருமூலர்

இவர் இங்கு குறிபிட்டுருப்பது சிவனுடைய வடிவை சொல்லவேண்டும
ாயின் ஒரு பசுவின் முடியை(மயிரை) எடுத்து அதை நூறாக கூறிட்டு பின்பு அதில் ஒன்றை எடுத்து ஆயிரமாக பிரித்து அதில் ஒன்றை நான்கயிரமாக பிரித்தால் அதில் ஒன்றே சிவனின் வடிவு என்று கூறி இருக்கிறார்.

இப்பொழுது நாம் இதை அறிவோம் ஒரு ஹைட்ரோஜென் (hydrogen) அணுவின் சுற்றளவு

0 .000000212 mm - ஹைட்ரோஜென்

சரி இப்பொழுது நாம் அவர் கூற்று படி கணக்கிட்டு பார்போம், ஒரு மனிதனின் முடியானது 30 -80 மைக்ரோன் (micron) அக உள்ளது, எனவே நாம் 50 மைக்ரோன் என்றே வைத்துகொள்வோம்

மயிரின் சுற்றளவு = 50 மைக்ரோன்
(size of an hair = 50 micron )

100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
(100 micron = 0.1 millimeter)

50 மைக்ரோன் = 0.05 மில்லிமீட்டர்

இப்பொழுது அவர் கூறியவாறு ஒரு முடியை நூறாக பிரிப்போம்

0.05/100 = 0.0005 மில்லிமீட்டர் (MM)
அதில் ஒன்றை ஆயிரத்தில் வகுப்போம்

0.0005/1000 = 0.0000005 மில்லிமீட்டர் (MM)
இப்பொழுது நமக்கு கிடைத்த பதிலை நாம் நான்காயிரத்தில் வகுத்தால் நான் சிவனின் வுருவத்தின் அளவை காணலாம் என்கிறார் திருமூலர்

0.0000005/4000 = 0.000000000125 மில்லிமீட்டர் (MM)

அகவே இவர் கடவுளின்(சிவனின்) அளவாக குறிபிடுவது சரசெரியாக 0 .000000000125 மில்லிமீட்டர் (MM) இப்பொழுது இந்த கடவுள் என கருதப்படும் அளவானது நாம் அறிவியல் ஆய்வாளர்களால் அளக்க பட்ட ஹைட்ரோஜென் (hydrogen) அணுவைவிட பன்மடங்கு சிறியதாக உள்ளானது. சரி அதை விட சிறியதாக என்ன இருக்கமுடியும் என்கிறிர்களா ... அதுதான் ஹிக்க்ஸ் போசோன் என்ற பெயரில் இன்றைய ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருகிறார்கள் . நாம் பொதுவாக சொல்லுவோம் அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்று . இப்பொழுது ஹிக்க்ஸ் போசொனில் சொல்வதும் அணு தனியாக செயல் படவில்லை அதற்கு உல் அணு ஒன்று உள்ளது அது தான் காட்ஸ் பார்ட்டிகள் என்னும் போசோன் கண்டுபிடிப்பு. அதன் அளவு இன்னும் அறியப்படவில்லை . அறியபட்டால் புரியும் நம் தமிழரின் தனித்துவம்
ஹிக்க்ஸ் போசோன் உருவம் என்ன??

என் ஆராய்ச்சியின் அடுத்தகட்டமாக சிவனின் அளவை சொன்ன திருமூலர் சிவனின் வுருவதை சொல்லாமலா இருந்திருப்பார்??

அவ்வளவு சிறிய சிவனின் உருவம் எப்படி இருக்கும் என்று நமக்குள் ஒரு ஆர்வம் உண்டாகிறது அல்லவா, இதோ அவனின் உருவ அழகை சொல்லும் திருமூலரின் வார்த்தைகள்

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குங் தோன்றான்
பரந்த சடையான் பசும்பொன் நிறத்தான்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே
-திருமூலர்

இதில் அவர் கூறியிருப்பது என்னவெனில் அனைத்திலும் கலந்தும் கலக்காமல் இருப்பவன், கண்ணனுக்கு தெரியாதவன் பரந்த சடையுடையவன் பசும்போன்னிரத்தில் இருப்பவன் , நினைபவர்கேல்லாம் கிடைக்காதவன் , அனைவரயும் மயக்கும் வெண்ணிலவானவானே. இது தான் அவர் சிவனின் வுருவாக சொல்கிறார்.

இதில் இப்பொழுது நாம் சில வரிகளை மீண்டும் ஆராய்ந்து பாப்போம்...

பொதுவாக சிவா பெருமானை நாம் சடாமுடியன் , சடையான் , என்று கூறுவோம் , அதே போல் அவரும் பரந்த சடையுடையவானே என்று கூறியிருக்கிறார், இப்பொழுது உங்கள் கண்கள் முன்னே ஒரு மனிதனை பரந்த சிடியுடன் நினைத்து கொள்ளுங்கள், நாம் பேச்சு வழக்கில் பரட்டை தலை என்று சொல்லுவோம் அல்லவா அதைபோன்று, அனால் சற்று பெரிய அளவில் .

பின்பு அந்த வுருவம் பொன்னிறத்தில் உள்ளது போல் நினைத்துகொள்ளுங்கள், இப்பொழுது உங்கள் கண் முன்னே நாம் வழக்கமாக காணும் சிவா பெருமான் பொன்னிறத்தில் சடா முடியுடன் காட்சியளிப்பான். இப்பொழுது திருமூலர் கூறியவாறு அந்த வுருவத்தை கண்ணுக்கு புலப்படாமல் சிறியதாக மாற்றுங்கள் . சாரா செரியாக ஒரு அனுவலவிற்கு

இப்பொழுது சொல்லுங்கள் ஹிக்க்ஸ் போசோன் சொல்லும் அந்த ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் எப்படி இருக்கும் என்று......!!
இணையதளத்திலும் தொலைகட்சிகளிலும் நாம் தங்க  நிறத்தில் படர்ந்த முடி போல காட்சி அளிக்கும் அந்த வடிவு தான் ஹிக்க்ஸ் போசோன் பார்ட்டிகள் என்றால் , அதை கண்டுவிட்டாரே திருமூலர் பல நூற்றாண்டு முன்னரே.

வியக்க வைக்கும் பழம்பாடல்கள்



“செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தன்பெயல் தலைஇய ஊழியும்"
- பரிபாடல்

மேற்சொன்ன பாடல் வரிகள், உலகம் எப்படி தோன்றியது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

வானவியல் விஞ்ஞானி கலிலியோ, உலகம் உருண்டையானது என்பதை 14ம் நூற்றாண்டில் தான் ஆய்வுப் பூர்வமாக நிரூபித்தார்.

ஆய்வு அறிக்கை: நெருப்புக் கோளமான சூரியனிலிருந்து தெறித்து விழுந்த அனற்பிழம்பு நீண்ட காலம் விண்ணில் சுழன்று பின்னர் படிப்படியாக குளிர்ந்து பூமி உருவானதாக அறிவியல் ஆய்வு தெரிவிக்கிறது. அதன் பின்னர் பூமியில் உயிரினங்கள் உருவாயின என்று உலகத்தின் உயிரின பரிணாம தோற்ற வரலாறு கூறுகிறது.

இந்த உண்மைகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

இதன் மூலம் பன்னெடுங்காலத்துக்கு முன்பே ஆழமான அறிவியல் ஆராய்ச்சி இருந்திருக்க வேண்டும் என்று அறிஞர் உலகம் கருதுகிறது.

மேலும், உலகம் பஞ்சபூதங்களால் ஆனது. நிலமும், நிலத்திலிருந்து ஆகாயமும், அதிலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும் உருவாயின என்ற ஐம்பூத தோற்ற வரலாற்றை

“மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும்
என்றாங்கு ஐம்பூதத்தியற்கை"

என்ற முரஞ்சியூர் முடிநாகராயரின் புறநானூற்றுப் பாடல் விளக்குவது மிகுந்த வியப்பளிப்பதாக உள்ளது

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்.



கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் : 50

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்:

விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r (விட்டம் = 2r )
மட்டு நாண் மாதவனில் மாறியே = 4 ஆல் பெருக்கு
எட்டதனில் ஏற்றியே = 8 ஆல் பெருக்கு
செப்பியடி = 20 ஆல் வகு

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r
= 2 ( 16/5) r = 2 π r

இங்கு π = 16 / 5 = 3.2 ( இது ஓரளவுக்குத் துல்லியமான தோராயமே )
இன்று நாம் பயன்படுத்தும் வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள்


கீழ்வாலை கிராமத்தில் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி வண்ண குகை ஓவியங்கள் பராமரிப்பின்றி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கீழ்வாலை என்னும் இடத்தில் (விழுப்புரம் மாவட்டம்) விலங்கு முக மனிதஓவியங்கள் கிடைத்துள்ளன. ஓர் ஓவியத்தில் குதிரையின் மீது ஒரு மனிதன்அமர்ந்திருக்க, அக்குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து ஒருவர் அழைத்துச்செல்வது போல அமைந்துள்ளது. இதனருகே மற்றுமோர் உருவமும்காணப்படுகிறது. இந்த மூன்று மனிதர்களது முகங்களும் விலங்கின்முகங்களாக அமைந்துள்ளன. விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல்என்னும் வேட்டைச் சடங்குகளைப்பிரதிபலிக்கும் ஓவியங்களாக இவற்றைக்கருதலாம்.
குதிரையின் மீது மனிதன் அடுத்ததாகப் படகு ஒன்றில் நான்கு மனிதர்கள் செல்வது போன்ற ஓவியம்காணப்படுகிறது. இதில் நான்கு மனிதர்களது முகங்களும் பறவைமுகங்களாகவே காணப்படுகின்றன.
இவைகளில் காணப்படும் மனித உருவங்களில் ஓர் உருவம் மட்டும்பெரியதாக உள்ளது; அம்மனிதனின் நீண்ட தலைமுடி இரு பகுதிகளாகப்பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. இது அவ்வுருவத்திற்குரிய சிறப்பைச்சுட்டுவதாக அமைகிறது. அவ்வுருவத்தை அக்குழுவின் தலைவன் என்றோஅல்லது முன்னோரது நினைவுச் சின்னம் என்றோ கருதலாம்.


இவ் ஓவியங்கள் இரும்புக்கால ஓவியங்கள் எனவும், பெருங்கற்கால ஓவியங்கள் எனவும் தொல்லியல்துறை அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது. புதுச்சேரி மாநில முன்னாள் தலைமை செயலாளர் பி.எல்.சாமி, இக்குகை ஓவியங்களுக்கும் சிந்துவெளி நாகரிகத்திற்கும் தொடர்பிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உடையாநத்தம் அருகில் உள்ள விசிறிப்பாறை, ஆலம்பாடி பாறை ஓவியங்கள் ஆகியவை இந்திய தொல்லியல் துறை ஆய்வேடுகளில், இந்தியாவின் மிக முக்கியத்துவம் மிக்க தொல்லியல் இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் புகழ்பெற்ற இடங்களாக குறிக்கப்படுவதில் திருவக்கரை கல்மரங்களைத் தவிர மற்றவை 600 ஆண்டுகளுக்குட்பட்டவை என மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது.ஆண்டுக்கொருமுறை இந்த இடங்களைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கும்படியான விழிப்புணர்வு ஓவியப்போட்டிகளை நடத்தி, மனித வரலாற்றுத்தொன்மையை மாணவர்கள் அறிய மாவட்ட கல்வித்துறையும், நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்குகை ஓவியங்கள் அமைந்துள்ள பகுதி பராமரிப்பின்றி இருக்கின்றது. இந்த இடத்தினைப்பற்றி குறிப்பிடும் தகவல் பலகையும் உடைந்து போய் தற்போது, சமூக விரோதிகளின் புகலிடமாகவும் விளங்குகிறது.வரலாற்று சிறப்பு மிக்க குகை ஓவியங்கள் அமைந்துள்ள இந்த இடங்களை உரிய பராமரிப்புடன் பாதுகாக்க வேண்டும்.

விரல் கணிதம்

விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.
இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்

ஆண்டின் முதல் நாள்..எவ்வாறு கணக்கிடப்படுகிறது?




ஆதி தமிழன் சூரியன், சந்திரன் நகர்வை புரிந்து கொண்டான். இவை ஒரு விதியின் கீழ் செயல்படுவதை உணர்ந்தான். விவசாயம் செய்ய தொடங்கியவனுக்கு பருவ நிலை மாற்றத்தைப் புரிந்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது , இதன் விளைவாக தான் ஆண்டு கணக்கீடு முறை உருவானது ( கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்). சந்திரனை அடிப்படையாகக் கொண்டு மாதங்களை உருவாக்க்கினான். சூரியனின் கிழக்கு மேற்கு நகர்வை நாட்கள் என்றான். சூரியனின் வடக்கு தெற்க்கு நகர்வை அயனநகர்வு என்றான்.


அயன நகர்வின் போது சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொட‌க்கமாகக் கொள்வது தமிழரின் மரபு. அப்போது இருந்தக் குமரி நிலப்பரப்பில் சூரியன் நிலநடுக் கோட்டில் வான் உச்சிக்கு வரும் நாளே ஆண்டின் தொடக்கம். அன்று இரவும் பகலும் சம நீளம் கொண்டதாக இருக்கும். அது இன்றைய பங்குனி 8 ( மார்ச்சு 21).



கடற்கோளுக்குப் பின் கபாடபுரத்திற்கு நகர்ந்த மக்கள் ஆண்டின் தொடக்கத்தை அந்நிலத்தில் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளான இன்றைய சித்திரை 1 ( ஏப்ரல் 14 ) க்கு மாற்றினர்.கபாடபுரம் கடற்கோளில் அழிந்த பின் தமிழர்கள் இன்றைய தமிழ் மண்ணுக்கு வந்து சேர்ந்தனர்.
அப்பொழுதுதான் ஆண்டின் தொடக்கம் குழ்ப்பதிற்கு உள்ளானது. இன்றைய தமிழ் நிலத்தில் சூரியன் வான் உச்சிக்கு வரும் நாள் சித்திரை 10 ஆகும்.

இதற்கு 2 சான்றுகள் உள்ளன‌:

1. அந்த நாள் இன்று பொன்னெர் பூட்டல் (கிராமத்து மக்களுக்குநன்றாக தெரியும் )
2. கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள லிங்கத்தின் மீது சித்திரை 10 அன்று சூரியன் ஒளி படும்.


அதனால், சூரியன் வான் உச்சிக்கு வரும் நாளே நமக்கு ஆண்டின் தொடக்க நாள்.

மார்ச்சு 21ஐ ஆண்டின் தொடக்கமாக கொண்ட குமரிகண்டத் தமிழர்களின் நாள்காட்டியே . 1952 முதல் நமது இந்திய அரசு தனது அலுவல் நாட்காட்டியாகப் பயன்படுத்தி வருகிறது !

தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனை


 


வாருங்கள் தஞ்சை கோயிலில் உள்ள தமிழர்களின் சாதனையை கண்டு வியப்போம்

படம் 1 : 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன,அதை சுற்றி இருப்பதை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில்,ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்
படம 2 : சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும்
படம் 3 : சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள் ,பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதையே முழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!??அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் ??!!!

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், " உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார் , சற்று அமைதியாக செல்லுங்கள் ! ' என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள், .

வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள், இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது (இ-1) அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது (இ-2), வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது(வ-1), கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது(வ-2), நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.


இது ஒன்று தானா, இல்லவே இல்லை, இது போன்று எத்தனை கோயில்களில், எத்தனை சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றது, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் உள்ளது இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா ?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது,அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது,அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் !!!!.காப்பாற்றுவோம் அழிவிலிருந்து நம் கலைப் பொக்கிஷங்களை.