Saturday 10 September 2016

பண்டை தமிழகம் அழிந்ததற்கான ஆதாரம்


'யோசனை' என்பது தமிழ்க்கணக்கில் தூர அளவைக் குறிக்கும். ஒரு யோசனை என்றால் 5 மைல்( 4 இலிருந்து 9 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது). 
 


 
 
 
தீங்கனி நாவல் ஓங்குமித் தீவிடை
இன்றேழ் நாளில் இருநில மாக்கள்
நின்றுநடுக் கெய்த நீணில வேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத் திந்நகர்
நாகநன் னாட்டு நானூறு யோசனை
வியன்பா தலத்து வீழ்ந்துகே டெய்தும்

- மணிமேகலை

நாவலோங்குந் தீவு - நாவலந் தீவு.

இப்பாடலின் கருத்துப்படி காவிரி பூம்பட்டினமும் நாகநன்னாட்டின் நானூறு யோசனையும் அழிந்து போனது எனத் தெரிகின்றது. ஒரு யோசனை என்றால் 5 மைல். எனவே 400 யோசனை என்றால் 2000 மைல்.ஆக அந்தளவு நீளமான நிலப்பரப்பு கடலுக்கடியில் மூழ்கிவிட்டது.

ஆதார நூல்கள் : யாழ்ப்பாணக் குடியேற்றம், வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்.

No comments:

Post a Comment