Friday 9 September 2016

தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி


தமிழர்களின் விஞ்ஞான நாள்காட்டி

பத்து திங்கள் சுமந்து பெற்றெடுத்தாள் தாய் என்று சொல்கிறோமே. இது சூரிய மாதத்தால் கணக்கிட முடியாது. தமிழர்களின் சந்திர (திங்கள்) மாதத்தால்தான் கணக்கிட முடியும்.

சந்திரன் பூமியை ஒரு சுற்று சுற்றி முடிக்க 27.32 நாட்கள்
இதுதான் ஒரு பெண்ணின் கருமுட்டை காலம்.

உம்:- ஒரு பெண்ணிக்கு (1) அஸ்வினி நட்சதிரம் அன்று மாதவிடாயின் சந்திரன் பூமியை ஒரு முழு சுற்று சுற்றி அடித்த அஸ்வினி நட்சதிரம் அன்று மாதவிடாகும். இதில் குறைபாடிருந்தால் முன்னோர்கள் தோசம் என்பார்கள்.

மேலும் அப்பெண் அஸ்வினி நட்சதிரம் அன்று மாதவிடாயின், (8)பூசம் – முதல் - (20)பூராடம் நட்சதிரம் வரை அவள் கருத்தரிக்க தகுதியானவள். அப்பெண் (14)சித்திரை நட்சதிரம் அன்று உறவுகொண்டு கருக்கட்டல் நிகழ்ந்தால் சந்திரன் பூமியை சரியாக 10 முழு சுற்று சுற்றி சித்திரை நட்சதிரம் அன்று குழந்தை பிறக்கவேண்டும். அதாவது 273-ஆம் நாள். இதில் மாற்றம் ஏற்பட்டால் குறைப்பிரசவம், தவணைக்கு முன்னதான பிரசவம், தவணைக்குப் பிந்திய பிரசவம், முதிர் பிறப்பு என முன்னோர்கள் சொல்வார்கள்.

இன்றைய விஞ்ஞான மருத்துவரால் கூட இயற்கையான கருத்தரிப்பில், கருக்கட்டல் நிகழ்ந்த நாளை மிகச் சரியாகக் கணித்தல் கடினமாகும். விஞ்ஞான தமிழ் நாள்காட்டியை பயன்படுத்தினால் மட்டுமே துல்லியமாக கணிக்க முடியும்.

திங்கள் நாள்காட்டியின் 27.32 நாட்கள் 27 நட்சதிரங்கள் ஆகும்

அவை :- 1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை, 7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி - என்பன.

முன்னோர்கள் ஆணை சூரியன் எனறும், பெண்ணை சந்திரன் என்றும் சொல்வார்கள். காரணம் சூரியன் ஆணின் உடலில் கோடிகணக்கான உயிரணுக்களை உருவாக்குகிறது. பெண்ணுக்கு சந்திரன் 27.32 நாட்களில் ஒரு கருமுட்டையை உருவாக்குகிறது.

சூரிய ஒளி சந்திரனில் பட்டு பூமியில் விழும் அளவு ஒரேபோல் இருப்பது 29.5 நாட்களுக்கு ஒருமுறை. அதாவது பிறையின் அளவு. (உம்:- பௌர்ணமி to பௌர்ணமி 29.5 நாட்கள்).

அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார் அன்றைக்குப் பெயர் பிரதமை. மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார் அன்றைக்குப் பெயர் துதியை. மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் ஆகும்.

அதே போல் பெர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார் அல்லவா? முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி,பஞ்சமி,சஷ்டி, .........அம்மாவாசை
முடிய வரும். இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இதை தமிழில் தேய்பிறைத் திதிகள் எனக் கூறுவார்கள். இவைகள் எல்லாம் நாள் பார்க்க உதவும்.

சந்திரனின் நிறம் வெள்ளை, முழுச் சுற்றுக்காலம் 27.32 நாட்கள்
புதனின் நிறம் பச்சை, முழுச் சுற்றுக்காலம் 88 நாட்கள்
வெள்ளியின் நிறம் வெள்ளை, முழுச் சுற்றுக்காலம் 225 நாட்கள்
பூமியின் நிறம் கருநீலம், முழுச் சுற்றுக்காலம் 365.25 நாட்கள்
செவ்வாயின் நிறம் சிவப்பு, முழுச் சுற்றுக்காலம் 687 நாட்கள்
வியாழனின் நிறம் மஞ்சள். முழுச் சுற்றுக்காலம் 11.86 ஆண்டுகள்
சனிக்கோளின் நிறம் கருநீலம். முழுச் சுற்றுக்காலம் 29.46 ஆண்டுகள்

தமிழர்கள் பயன்படுத்திய நாள்காட்டிகள்

திங்கள் நாள்காட்டி 27.32 நாட்கள் - மனிதனின் பிறப்பு
திதி நாள்காட்டி 29.5 நாட்கள் - மறு பிறப்பு-ஆன்மாவை கணித்தல்
புவியல் நாள்காட்டி 365.25 நாட்கள் - பூமியின் காலநிலை
வியாழன்-சனி நாள்காட்டி 60 வருடங்கள்- பிரபஞ்ச காலநிலை
சூரிய குடும்ப நாள்காட்டி 28,800 வருடங்கள் - பேரண்ட காலநிலை

மேலும் இந்த சுழற்சிக்காகும் காலத்தை பின்வருமாறு நம் முன்னோர்கள் பகுத்துள்ளார்கள்: -
12 மாதம் = 1 சூரிய வருடம் (சூரியன் நாம் பார்க்கும் 360 டிகிரி கொண்ட வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம். அதாவது 1 வருடம் = 12 மாதம்

43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம் = 4 யுகங்கள் (சத்ய யுகம் + திரேதா யுகம் + த்வாபர யுகம் + கலி யுகம் )

71 சதுர் யுகம் = 30,67,20,000 சூரிய வருடங்கள் = 1 மன்வந்திரம்
இதே போல 14 மன்வந்திரங்கள் உள்ளன. (ஒவ்வொரு மன்வந்திரத்திலும் குறிப்பிட அடையாளங்களை உடைய மக்கள் தோன்றுவார்கள்.

ஒவ்வொரு மன்வந்திரமும் ஒரு சத்ய யுக காலம் 'சந்தி' என்னும் இடைப்பட்ட காலத்தைக் கொண்டு வரும். எனவே
1 மன்வந்திரம் + 1 சந்தி = 30,67,20,000 சூரிய வருடங்கள் .
14 சந்தி + 14 மன்வந்திரம் = 4,31,82,72,000 சூரிய வருடங்கள்

இதையே இப்படியும் சொல்லலாம் :-
4,31,82,72,000 சூரிய வருடங்கள் = 1 கல்பம்
1 கல்பம் + 1 கல்ப சந்தி = 4,32,00,00,000 சூரிய வருடங்கள்
4,32,00,00,000 சூரிய வருடங்கள் அல்லது 1 கல்பம் = நான்முகப் பிரம்ம தேவனின் ஒரு பகல் பொழுது.
அதே கல்ப அளவு பிரம்ம தேவனின் ஒரு இரவு ஆகும்
ஆக 1 பகல் கல்பம் + 1 இரவு கல்பம் = பிரம்ம தேவனின் ஒரு நாள்
= 8,64,00,00,000 வருடங்கள்

No comments:

Post a Comment