Friday 9 September 2016

பண்டைத் தமிழர்களின் கால அளவு-நாள் பகுப்பின் அடிப்படை

பண்டைத் தமிழர்களின் கால அளவு-நாள் பகுப்பின் அடிப்படை








தமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர். ஒரு நாளின்பொழுதுகளை ஆறு சிறும் பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும்.

சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது.
உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை
காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை,
8-9 மணி வரை புதன் ஓரை,
9-10 வரை சந்திரன் ஓரை,
10-11 வரை சனி ஓரை,
11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை,
12-1 மணி வரை செவ்வாய் ஓரை.
இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.
இதேபோல்
செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை,
புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை.
பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன. சூரியன் உதிக்கும் நேரம் ஒரு நாளின் தொடக்கமாகக் கொள்ளப்படுவதாலும், பூமி சுழல்வதற்கேற்ப ஒவ்வொரு இடத்திற்கும் சூரியன் உதிக்கும் நேரம் மாறுபடுவதாலும், ஒவ்வொரு இடத்திற்கேற்றவாறு ஒரு நாளின் தொடக்கமும் மாறுபடும்

No comments:

Post a Comment